தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு endoscopy கருவி. ஒன்று அவசரமாகத் தேவை! வடக்கு சுகாதார மறுமலர்ச்சிக்கு இது பேருதவியாகும்

 

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு உணவு செமிபாடு தொடர்பான சிக்கல்களைக் கண்டறிவதற்கு வாய்மூலம் குழாய் விட்டுப் பரிசோதித்தல் (endoscopy ) கருவி அவசரமாகத் தேவைப்படுகின்றது.

சமூக அமைப்புக்கள்> சேவை நோக்குக் கொண்ட கொடையாளர்கள், புலம்பெயர் உறவுகள், புலம்பெயர் அமைப்புக்கள் போன்றவர்களிடம் இருந்து தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலை நோயாளர் நலனில் அக்கறையுடன் செயற்படும் சங்கத்தினராகிய நாம் இந்த வேண்டுகையை முன்வைக்கின்றோம்.

வடக்கு மாகாணத்திலே ஏன் கிழக்கு மற்றும் அநுராதபுரம், புத்தளம், சிலாபம் உட்பட ஏராளமான புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கின்ற ஒரே ஒரு வைத்தியசாலையாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை காணப்படுகின்றது. இங்குவரும் புற்றுநோயாளர்களில் ஏராளமானவர்களுக்கு endoscopy Test பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய தேவைப்பாடும் உள்ளது. அதனைவிட புற்றுநோய் அல்லாத ஏனைய நோயாளர்களும் உள்ளனர். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் endoscopy கருவி ஒன்று மட்டுமே காணப்படுகின்றமையால், ஒருவரைப் பரிசோதித்ததன் பிற்பாடு, அதனை சுத்தப்படுத்தியே அடுத்த நோயாளர்களைப் பரிசோதிக்கவேண்டிய நிலைமை உள்ளது. இதனால் நோயாளர்கள் அதிக நேரத்தை சத்திரசிகிச்சைக் கூடத்தில் செலவழிக்கவேண்டியுள்ளது. திருப்திகரமான சேவையையும் வைத்தியசாலையால் வழங்கமுடியாமலும் உள்ளது. இதனால் இன்னொரு .endoscopy கருவி இருக்குமாயின் நோயாளர்கள் இலகுவில் சிரமமின்றிப் பயன் பெறுவர்.

இந்தக் கருவி ஒன்று கொள்முதல் செய்வதற்கு கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபா வரை தேவைப்படும்.

ஆகவே, சேவைநோக்கம் கொண்ட – சமுதாய நலனில் அக்கறைகொண்ட – பிறக்கும்போதே கொடைப்பண்பையும் கொண்டு இறைவனால் படைக்கப்பெற்ற அன்பர்கள் யாராவது இருந்தால் என்னுடன் தொடர்புகொண்டு இந்த நல்ல கைங்கரியத்தை – எமது வடபகுதி சுகாதார மறுமலர்ச்சிக்கு – உங்களாலான உதவியை மேற்கொள்ளமுடியும்.

நன்றி

லயன் சி.ஹரிகரன்
செயலாளர்,
ஆதார வைத்தியசாலை,
தெல்லிப்பழை.
தொடர்பு: 0772230535

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.