தரமற்ற, பதிவுசெய்யப்படாத மருந்துகள் நாட்டில் என்றும் பயன்படுத்துவதில்லை! எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் கெஹலிய பதில்

நாட்டுக்குள் பயன்படுத்தப்படும் மருந்து பாவனையின் போது சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த காலங்களில் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவ்வாறு இல்லாமல் பதிவு செய்யப்படாத தகாத மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸ தெரிவிக்கையில் –

நாட்டில் விற்பனைக்காக இருக்கும் மருந்துப் பொருள்களின் உற்பத்திப் பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறனுக்கான தொடர்புடைய தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்து பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையின் பணியாகும்.

எவ்வாறாயினும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையின் நிர்வாகிகள் அந்நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்களை விடுவித்து அவர்களின் விருப்பத்துக்கேற்ப செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுவதோடு,உகந்த மருந்துகள் ஒழுங்குமுறை செயல்முறை இல்லாத காரணத்தால்,தரமற்ற மருந்துகள் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன எனவும் அண்மைய கால தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இத்தகைய செயல்களின் விளைவாக,எதிர்மறையான மருந்தால் எதிர்வினைகள்  ஏற்பட்டு சிலர் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. எனவே, மக்களின் சுகாதார விடயத்தில் அதிக கவனம் செலுத்தி, அதிகாரிகளின் இதுபோன்ற செயல்களைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்.

அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் –

கண்டி வைத்தியசாலையில் இடம்பெற்ற கண் சொட்டு மருந்து தொடர்பிலேயே எதிர்க்கட்சித்தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் அந்த மருந்து 7 வருடங்கள் பயன்படுத்தி இருக்கிறது. அது பதிவு செய்யப்பட்ட மருந்தாகும். அவ்வாறு இல்லாமல் பதிவு செய்யப்படாத தரம் குறைந்த மருந்து அல்ல. குறித்த மருந்து 7 வருடங்களாகப் பயன்படுத்தப்படுவதுடன் 53 நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகும்.

அதேபோன்று பேராதனையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பிருந்தீர்கள். ஆரம்பத்தில் இரண்டு பிள்ளைகள் மரணித்தனர் எனத் தெரிவித்தார்கள். மிகவும் தவறாக இதனைப் பயன்டுத்துகிறார்கள்.

குறித்த மருந்து பிள்ளைகளுக்கு பயன்படுத்துவதில்லை. அதில் ஒன்றில் 5 பேருக்கு பயன்படுத்த வேண்டும். அந்த மருந்தில் 2 எடுத்துக்கொண்டு 10 பேருக்குப் பயன்படுத்தி இருக்கிறது. 9 பேருக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. ஒருவருக்கு பிரச்சினையாகி இருக்கிறது. மருத்துவ விஞ்ஞானத்தில் அவ்வாறான பிரச்சினை ஏற்பட இடமிருக்கிறது.

அதேபோன்று எங்களிடம் 14 உயிர்காக்கும் மருந்துகள் உள்ளன. அந்த 14 உயிர் காக்கும் மருந்துகளும் தற்போது எந்தக் குறையும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளன.

இதை நான் கூறும்போது, மரணிப்பதை நியாயப்படுத்துவதாக  வாதிடுவார்கள். அவ்வாறு இல்லை. இந்த நிலையில்  சில சிக்கல்கள் ஏற்படும் போக்குகள் இருக்கின்றன என்பதை யார் வேண்டுமானாலும் அறிவார்கள்.

அத்துடன்  இங்கு சில குறைபாடு இருக்கிறது என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும்  வெளியார்களின் அழுத்தங்களால் எம்மை அச்சுறுத்தி அழித்து, அவ்வாறு இல்லாவிட்டால் இதன் மூலம் பொறாமை அரசியலை கட்டியெழுப்ப இடமளிக்கப்போவதில்லை . – என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,  சந்தேகம் இன்றி உறுதியுடனே இந்தக் குற்றச்சாட்டுகளையெல்லாம் நான் முன்வைத்தேன்.  அனைத்து மருந்துகளும் தரமான மருந்துகள் என்று கூறப்படுகின்றன. ஏற்பட்ட சம்பவங்கள் மருந்தின் தாக்கத்தால் ஏற்பட்டவை என தற்போது கூறுகின்றனர்.

அதனால் குறித்த மருந்தின் தரம் தொடர்பான அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கிரேன்.  அதனால் மருந்தின் தாக்கத்தால் மரணம் ஏற்படவில்லை. தரம் குறைந்த மருந்து பயன்டுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோன்று இந்த மருந்து பொருத்தமற்றது என தெரிவிக்கப்பட்ட அறிக்கையையும் நான் சபைக்கு சமர்ப்பிக்கிறேன். அதனால் குறித்த மருந்து பல வருடங்கள் பயன்படுத்தப்பட்டது எனத் தெரிவிக்க வேண்டாம். முடியுமானால் இந்த அறிக்கைகள் பிழை என நிரூபித்துக்காட்டுங்கள். – என்றார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.