பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை
நுவரெலியா – இராகலையில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசித் தேவைகளையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் உத்தரவுக்கு அமையவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரனின் ஆலோசனைக்கமைய, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை