சாரத்தைக் கொண்டு முகத்தை மறைக்கும் நிலைமை ஏற்படுமாம்! ஜகத் குமார சாட்டை

வறிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும். தகுதியுடையவர்கள் நீக்கப்பட்டு தகுதியற்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனைக் கூறும் போது நாமே மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறுகிறார்கள்.

அரசாங்கத்துக்குள் சிலர் தாமே பெரியவர். தமக்கே எல்லாம் தெரியும். தாமே சிறப்பாக செய்வதாக நினைக்கின்றனர். சிறப்பாக செய்வதாக நினைத்து வெளியில் இறங்கினால் சாரத்தைக்கொண்டு முகத்தை மறைக்கும் நிலையே ஏற்படும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்
போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நான் இது தொடர்பில் கதைத்தன் பின்னர் நிதி இராஜாங்க அமைச்சர் எனது தோலில் ஏற முயன்றார். நாங்களே அவர்களை வழிநடத்துவதாகக் கூறினார். நாம் வழிநடத்துவதாக இருந்திருந்தால் ஏற்கனவே முழுநாடும் தீப்பற்றி இருக்கும். அப்படி செய்வதற்கான இயலுமையும் உள்ளது.

இந்தப் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாகவோ அல்லது நாட்டுக்கு தீ வைப்பதற்கோ எனக்குத் தேவையில்லை. அப்பாவி வறிய மகக்ளுக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு நீதிகிடைக்க வேண்டும். அதனைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை எனக்குள்ளது.

அரசாங்கத்துக்கும், அமைச்சருக்கும் ஒருவாக்குகளே உள்ளது. எனக்கும் ஒருவாக்குகளே உள்ளது. சிலர் தாமே பெரியவர். தமக்கே எல்லாம் தெரியும். தாமே சிறப்பாக செய்வதாக நினைக்கின்றனர். சிறப்பாக செய்வதாக நினைத்து வெளியில் இறங்கினால் சாரத்தைக்கொண்டு முகத்தை மறைப்பது போன்று தவறான ஒன்றையே காண வேண்டி ஏற்படும்.

தமக்கு வழங்கப்படும் நிவாரணங்களை இல்லாமல் செய்வதற்காக நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. வருமானமுள்ளவர்களுக்கு நலன்புரிகளை வழங்குமாறு ஒருபோதும் நாம் கூறவில்லை. தகுதியுடையவர்கள் நீக்கப்பட்டு தகுதியற்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனைக் கூறும் போது நாமே மக்களை தவறாக வழிநடத்துவதாகக் கூறுகிறார்கள்.

மேலும் நான் மொட்டுக்கட்சிக்கு ஏற்றவர் அல்லர் எனக் கருதலாம். என்னை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கலாம். எமது பெறுமதி கட்சிக்கு தெரியாவிட்டால் அதனை நான் பொருட்படுத்தவில்லை. எம்மால் முடியுமானவரை செயற்படுவோம்.

நான் கட்சியிலிருந்தும் விலகவில்லை. அரசாங்கத்திலிருந்தும் விலகவில்லை. அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு அனைத்துக்கும் கைகளை உயர்த்தும் மின்கம்பங்களை போன்று செயற்பட முடியாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.