யானையால் பாதிக்கப்பட்டோருக்கு காரைதீவில் நஷ்ட ஈடு வழங்கல்!
நூருல் ஹூதா உமர்
கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் காட்டு யானைகளின் தாக்கத்தால் சொத்தழிவுக்குள்ளாகிய காரைதீவு-10 மற்றும் காரைதீவு-11 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் 06 பயனாளிகளுக்கான நஷ்டஈட்டுக் கொடுப்பனவுக்கான 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகள் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜனால் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை