மயக்க மருந்தால் தொடரும் மரணங்கள் வைத்தியர் ரவிகுமுதேஸ் குற்றச்சாட்டு
கொழும்பு தேசிய கண்வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்ட நோயாளியொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள சுகதாரதொழில்சார்வல்லுனர்கள் சங்கம் இந்த உயிரிழப்பிற்கு சத்திரகிசிச்சைக்கு முன்னர் கொடுக்கப்பட்ட மயக்கமருந்து காரணமா என கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த உயிரிழப்பிற்கு காரணம் புரோபோபொல் என்ற நரம்புமயக்கமருந்தா என விசாரணை அவசியம் என தெரிவித்துள்ள ரவிகுமுதேஸ் பேராதனை இதே மருந்தே பேராதனை விசேட சிறுவர் வைத்தியசாலையில் குழந்தையொன்றின் மரணத்திற்கும் காரணம் என குற்றச்சாட்டுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கொஸ்கொடவை சேர்ந்த 35 வயது இரண்டு பிள்ளைகளின் தாயார் தேசிய கண்வைத்திய சாலையில் இடம்பெற்ற சத்திரகிசிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளார் என குறிப்பிட்டுள்ள ரவிகுமுதேஸ் உயிரிழந்தவர் இதற்கு முன்னர் கொழும்பில் கண்வைத்தியசாலையில் கண்ணில் லென்சை பொருத்துவதற்கான சத்திரசிகிச்சையை மேற்கொண்டார்இஎனினும் சத்திரகிசிச்சையின் போது கண்ணில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அன்றைய தினமே மற்றுமொரு சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டது ஆனால் அந்த சத்திரசிகிச்சையின் பின்னர் அவருக்கு நினைவுதிரும்பவில்லை என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மயக்கமருந்தே அவரது மரணத்திற்கு காரணம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர் என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
பேராதனை வைத்தியசாலையில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்திற்கும் இந்த மருந்தே காரணம் என தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டபோதிலும் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மறுத்துவிட்டது சுகாதார அமைச்சர் கூட நாடாளுமன்றத்தில் அந்த வகை மருந்து காரணமில்லை என குறிப்பிட்டுள்ளார் என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை