போதைப்பொருள் தடுப்பில் அரசாங்கம் தீவிர ஈடுபாடு! பிரதமர் தினேஸ் கூறுகிறார்

சர்வதேச கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

இதுதொடர்பாக பல தடவைகள் பாதுகாப்புச் சபையிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

சர்வதேச கடல் மார்க்கத்தைக் கண்காணிக்க இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஏனெனில், போதைப்பொருள் என்பது இந்தியாவிற்கும் பாரிய அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. எம்முடன் இந்தியா தகவல்களையும் பரிமாறிக் கொண்டு வருகிறது.

பாதுகாப்புத் துறையினர், போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த நவீன கருவிகளின் ஊடாக தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம்தான், உலகின் இன்று இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகமாக இருக்கிறது.

இதனைக் கட்டுப்படுத்த எமது பாதுகாப்புத் துறையினர் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

கல்விக் கூடங்கள் அதிகமாகக் காணப்படும் நகரங்களின், போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பாக அரசாங்கம் தற்போது அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, சட்டங்களின் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் தீர்மானித்துள்ளோம். – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.