மதத்தின் பெயரினால் சில்மிசம் மதத்தை அவமதிக்கும் செயல்! கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி காட்டம்
பௌத்த மதகுரு ஒருவர் இரண்டு பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு மக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். மதத்தின் பெயரால் மதகுரு என்று அனைவரும் வணங்கும் இவர்கள் இவ்வாறான அற்ப சிறிய விடயங்களில் தம்மை ஆட்படுத்துவது கண்டிக்கப்படத்தக்க ஒன்றாகும்.
– இவ்வாறு தெரிவித்தார் பிரபல சமூக சேவையாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி.
இது தொடர்பாக அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –
தர்மத்தைப் போதிப்பதே பௌத்த தேர வாதம். இன்று மதத்தின் பெயரால் துறவறம் பூண்டு, தர்மத்தைப் போதித்து சமூகத்தை வழிநடத்தவென வந்த பௌத்த துறவிகள் சிலர் – அனைத்து மக்களும் கையெடுத்து வணங்கும் – மரியாதையளிக்கும் – வணங்கும் – மதகுருமார்களின் இவ்வாறான செயல்களால் அந்த மதத்தின் பெயர் – மதத்தின் மீதான மக்களின் நம்பிக்கை – கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மதகுருமார்களின் செயற்பாடு அருவருக்கத்தக்க ஒன்றாகும்.
ஆசைகளை – உலகின் பந்தபாசங்களை – முற்றாகக் களைந்த துறவிகளே பௌத்த தேரர்கள் ஆவர். இந்து மதத்தைத் தவிர, பௌத்தம், கிறிஸ்தவம் (சபைகளைத் தவிர) என்பன மதகுருமார்களுக்கு துறவறத்தையே போதிக்கின்றன. அவர்கள் நித்திய பிரமச்சாரிகள். இதனாலேயே இரண்டு மதங்களின் மதகுருமாரும் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றார்கள். போற்றப்படுகின்றார்கள். வணங்கப்படுகின்றார்கள்.
ஆனால், முற்றும் துறந்த முனிவர்களாக சமூகத்தில் உயரிய கௌரவத்துடன் மதிக்கப்படும் ஒருசில பௌத்த தேர வாதிகள் இன்று நாட்டின் அரசியலை நிர்ணயிப்பவர்களாகவும் இவ்வாறான கீழ்த்தரமான இழிசெயற்பாடுகளில் ஈடுபடுகின்றமையும் கௌதம புத்தரின் புனிதமான கௌ;கைக்கு இழுக்கை ஏற்படுத்துவதும் மக்களை மதரீதியான நம்பிக்கையில் வெறுப்படையச் செய்கின்ற செயலாகும்.
இவ்வாறானவர்களுக்கு நாட்டின் அரசும் நீதித்துறையும் வழங்கும் தண்டனை உண்மையான மத, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அமையவேண்டும். மதத்தின் பெயரால் போலி ஆசாமிகள் இனி உருவாகுவதைத் தடுப்பதாக அமையவேண்டும். – என்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை