16 கேடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஜெல் பவுடர்களுடன் ஐந்து வர்த்தகர்கள் கைது!
தங்க ஜெல் மற்றும் பவுடரை இந்தியாவின் சென்னைக்கு எடுத்துச் செல்ல தயாரான ஐந்து வர்த்தகர்களை விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் மற்றும் பவுடரின் பெறுமதி சுமார் 16 கோடியே 40 லட்சம் ரூபாவென அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகர்கள் நால்வரும் 55 வயதுடைய வர்த்தகருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 5 வர்த்தகர்களும் செவ்வாய் பிற்பகல் 1.55 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்படும் விமானத்தில் பயணத்தை மேற்கொள்ளவே விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
குறித்த நபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவர்களது பயணப் பொதியை சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 08 கிலோ 650 கிராம் எடையுள்ள 23 தங்க ஜெல் குளிகைகள் மற்றும் 10 பொதிகளில் தங்கப் பவுடர் ஆகியவற்றை மீட்டனர்.
கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் குளிகைகள் மற்றும் தங்க பவுடர் பொதிகளை மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைத்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை