வேலணை கல்வி கோட்ட விளையாட்டு போட்டிகள்
வேலணை கோட்ட கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடாசாலைகளுக்கிடையிலான மெய்வன்மை திறனாய்வு போட்டி புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதானத்தில் வேலணை கோட்ட கல்விப் பணிப்பாளர் கா.சசிதரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக உடற்கல்வி விஞ்ஞான அலகுத் தலைவர் சி. சபா ஆனந்தும்சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் பொன் சகிலனும் கௌரவ விருந்தினர்களாக சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் மற்றும் கருணாகரன் குணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல ஆண்டுகளுக்கு பின்னர் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் கோட்ட மட்ட போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .
முதலிடத்தினை புங்குடுதீவு மத்திய கல்லூரியும் இரண்டாமிடத்தை வேலணை மத்திய கல்லூரியும் தட்டிச்சென்றன
கருத்துக்களேதுமில்லை