உலக்கையால் மனைவியை அடித்துக்கொன்ற கணவர்
கணவனால் உலக்கையால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று (13) பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் புத்தளம் – மாதம்பை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவரே குறித்த கொடூர கொலையைப் செய்துள்ளார் என்று பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையாளியான கணவரை கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை