சக்சஸ் பாலர் பாடசாலையின் உணவுத் திருவிழா – 2023

திருகோணமலை சக்சஸ் பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவுத் திருவிழா – 2023 சனிக்கிழமை திருகோணமலை சாஹிறா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

மேற்படி பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி சாஷியா முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்த உணவுத்திரு விழாவுக்கு அதிதிகளாக சாஹிறா கல்லூரியின் அதிபர் எம்.எம்.எம்.முஹைஸ், திருமலை ஜமாலியா முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய அதிபர் ஏ.ஜே.எம்.சாலி, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்  திருமதி கே.அமுதியா, இளைஞர் கழக உத்தியோகத்தர் அலாவுதீன்பாவு உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இந்தப் பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட வருடத்திலிருந்து இந்த உணவுத் திருவிழாவை வருடா வருடம் நடத்தி வருவதாகவும், இது 6 முறையாக நடத்தப்படுகின்றன என்றும் இவ்விழாவில், காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற உணவுப் பொருள்கள் யாவும் சக்சஸ் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களால் தயாரிக்கப்பட்டது என்று குறித்த பாலர் பாடசாலையின் அதிபர் (திருமதி) சாஷியா முபாறக் தெரிவித்தார்.

காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மதியம் 12.30 மணிவரை இடம்பெற்ற இந்த உணவுத் திருவிழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பல நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு உணவுப் பொருள்களை பார்வையிட்டதுடன் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், அப்பொருள்களை கொள்வனவும் செய்து அவர்களுக்கு ஆர்வத்தையும் வழங்கி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.