சாய்ந்தமருது பிரதேச செயலகம் அம்பாறை மாவட்டத்தில் 3 ஆமிடம்!
2022 ஆம் ஆண்டு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய செயற்திட்டங்களின் அடைவு மட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகம் 03 ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இதனடிப்படையில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிகா, சமூக பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்பீக், ஏ.எஸ்.எப். சுமையா பானு ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது.
கருத்துக்களேதுமில்லை