குருந்தூர்மலையில் தமிழர் வாழ்வுரிமை மறுப்பு ரவிகரன் உள்ளிட்டோர் பொலிஸ் முறைப்பாடு!

குருந்தூர்மலையில் சைவவழிபாடுகள் மேற்கொள்ள முடியுமென ஏற்கனவே நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

இந் நிலையில் கடந்த 15.07.2023 வெள்ளிக்கிழமை குருந்தூர்மலையில் சைவவழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன் ஆகியோரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட தேரர்கள் மற்றும், பெரும்பாண்மை இனத்தவர்கள் ஆகியோராலேயே தமிழர்களின் சைவவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதாகக் குறித்த முறைப்பாட்டின்போது தம்மால் தெரிவிக்கப்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு நீதிமன்றக் கட்டளையை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் சைவவழிபாட்டைக் குழப்பியவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டனர் எனவும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளதாக முறைப்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.