சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் வவுனியா தனியார் பஸ் சங்கம்! சாள்ஸ் எம்.பி. பாராட்டு

சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் கூடிய தலைமைத்துவத்தாலேயே எவ்வித பிரச்சனைகளும் இன்றி வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் 25 ஆண்டுகளைக் கடந்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பி. தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் பொதுக்கூட்டமும் சங்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் –

இன்று பல அமைப்புகள் உருவாக்கம் பெறுகின்றன. அவை சில ஆண்டுகளில் நிர்வாக சிக்கல்களால் காணாமல் போய்விடும்.

இவை சமூகத்துக்கு நல்லதல்ல. பொதுமக்களுக்கான சேவையில் ஈடுபடும் ஓர் அமைப்பு எவ்வித நிர்வாக பிரச்சனைகளும் இன்றி பல்வேறான மக்கள் பணிகளையும் செய்து வளர்ச்சி பாதையில் செல்வதென்பது பாராட்டத்தக்கது.

சிறந்த நிர்வாக திறனும் இதற்கான கட்டமைப்பும் தலைமைத்துவமுமே அதற்கு தேவை. அது வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்திடம் உள்ளது. -எனவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.