புதையல் தோண்டிய நால்வர் மன்னார் பகுதியில் கைது!
மன்னார் தாராபுரம் பகுதியிலுள்ள புராதான இடமொன்றில் புதையல் தோண்டிய நால்வர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் கருவியையும் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
கைதானவர்கள் களனி, கெக்கிராவ பிரதேசங்களில் வசிக்கும் 35 மற்றும் 46 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
இவர்கள் நிலத்தில் உள்ள பாறைகள் மற்றும் உலோகப் பொருள்களை புதையல் தோண்ட பயன்படத்தப்படும் கருவி மூலம் ஆய்வு செய்து புதையல் தேடியதாக விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்
கருத்துக்களேதுமில்லை