பாணுக்குள் ஒழித்து விற்பனைசெய்யப்பட்ட உடல் எடை குறைப்பு போதை மாத்திரை!
சகுவாரோ எனப்படும் உடல் எடையை குறைக்கும் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை உணவுப் பொருள்களில் மறைத்து விற்பனை செய்யும் மருந்துக் கடையொன்று தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, பதுளை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் அதனைச் சுற்றிவளைத்து 1793 மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.
பதுளை மஹியங்கனை வீதியில் இயங்கி வரும் மருந்துக் கடை ஒன்றில் பாணில் 88 மாத்திரைகளும் விற்பனைக்காக தனித்தனியாக 1705 மாத்திரைகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன எனக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் பதுளை பிராந்திய சுகாதார சேவை அலுவலக உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை