13வது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்கவைக்கும் இலங்கை நகர்வுக்கு இந்தியா அனுமதியளிக்கக்கூடாது! நாடு கடந்த தமிழீழ அரசு மோடிக்குக் கடிதம்

13 ஆவது திருத்தம் மூலம் இலங்கை இந்தியாவை சிக்கவைக்கின்றது தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கான இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளை இதன் மூலம் கட்டுப்படுத்துகின்றது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான சர்வதேச சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு இந்தியா தலைமை வகிக்கவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதியை 21 ஆம் திகதி சந்திக்கவுள்ள நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் பிரதமர் மோடிக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

ஈழத்தமிழர்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளுக்கு இந்தியா தலைமை வகிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இராணுவ மற்றும் பொருளாதார பலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் சமச்சீரற்ற உறவைக் கருத்தில் கொள்ளும்போது இலங்கை போலித்தனத்தையும் மோசமான நம்பிக்கை இராஜதந்திரத்தையும் பின்பற்றுகின்றது எனப்  பயன்படுத்துகின்றது என நாடு கடந்த அரசின் பிரதமர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தின் மூலம் இந்தியாவைச் சிக்கவைக்கும் இலங்கையின் வெற்றிகரமான நகர்வுகளுக்கு இந்தியா அனுமதியளிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள உருத்திரகுமாரன் 13 ஆவது திருத்தம் என்ற கயிற்றை இந்தியா அறுத்து எறியவேண்டிய தருணம் இது எனவும் குறிப்;பிட்டுள்ளார்.

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் 40 வருட நினைவுதினத்துக்கு  முன்னர் பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதை தனது கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.