உணவக உரிமையாளர்களுடன் கல்முனையில் கலந்துரையாடல்!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம் பௌசாத்தால், உணவகங்களை மேம்படுத்தி சுகாதாரமான உணவை வழங்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம் பீ ஏ வாஜித் அவர்களும் தெரிவு செய்யப்பட்ட பிரிவுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது தத்தமது பிரிவுகளால் முன்னெடுக்கப்படும் செயற்றிடங்கள் தொடர்பிலும் உணவகங்களை மேம்படுத்தி சுகாதாரமானதும் சுத்தமானதுமான உணவை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் விவரித்தனர்.
இந்தக் கலந்துரையாடலுக்கு கல்முனை தெற்கு, கல்முனை வடக்கு, சாய்ந்தமருது, நாவிதன்வெளி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளுக்கு உட்பட்ட உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கான நேரமும் வழங்கப்பட்டிருந்தது.
கருத்துக்களேதுமில்லை