கஞ்சா பயிர்ச் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க முட்டிமோதும் முதலீட்டாளர்கள்! அமைச்சர் திலும் அமுனுகம கூறுகிறார்

நாட்டில் கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டிருந்த முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் திலும் அமுனுகம, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வகையான முதலீட்டையும் உள்ளடக்கும் வகையில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த சட்டங்களைக் கொண்டுவரும் போது, ஏனைய அரச நிறுவனங்களின் தற்போதைய சட்டங்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலீடுகளுக்குத் தடைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள தற்போதைய சட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேநேரம், கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மருந்து தயாரிப்புக்காக மாத்திரம் கஞ்சா பயிர் செய்கை திட்டத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன் முதற்கட்ட செயற்திட்டத்தை இந்த வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.