யாழில் அரை நிர்வாணத்தில் அரச ஊழியர் அட்டகாசம்!
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை-காரைநகர் பகுதியில் மதுபோதையில் அரைநிர்வாணமாக நின்ற அரச ஊழியர் ஒருவர் மற்றுமொரு அரச ஊழியரைப் பொல்லால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கடமை நேரத்தில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) ஊழியர் ஒருவர் மது போதையில் அரை நிர்வாணமாக நின்றுகொண்டிருந்ததாகவும், இதன்போது அப்பாதையில் சென்றுகொண்டிருந்த அரச ஊழியர்களும் பொதுமக்களும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபர் அங்கிருந்தவர்களைத் தகாதவார்த்தைகளால் பேசியதாகவும், அரச ஊழியர் ஒருவரைப் பொல்லால் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இச் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பயணிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குறித்த அரச ஊழியர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை