சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு சைக்கிள் பாதுகாப்பு நிலையம் அமைப்பு! 1997 கலைப்பிரிவு மாணவர்களால்
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி 1997 ஆம் ஆண்டு உயர்தரவகுப்பில் கல்வி கற்ற கலைப்பிரிவு மாணவர்களால், கல்லூரி முதல்வர் லயன் மு.செல்வஸ்தானின் கோரிக்கைக்கு அமைவாகத் தாம் கல்விகற்ற பாடசாலையில் தமது அணியினரின் பசுமையான அந்த இனிய நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் பொருட்டு 24 லட்சம் ரூபாவுக்கு சைக்கிள் பாதுகாப்பு நிலையம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சைக்கிள் பாதுகாப்பு நிலையம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு துர்க்காதேவி தேவஸ்தானம், சிவபூமி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவரும் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும் தாம் கல்வி கற்ற 1997 ஆம் ஆண்டு காலத்தில் தம்மை ஆற்றுப்படுத்திய வகுப்பாசிரியருமான கலாநிதி ஆறு.திருமுருகனால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட உள்ளது.
கருத்துக்களேதுமில்லை