புத்தசாசன அமைச்சர் யாழுக்கு திடீர் விஜயம்!

புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

கடற்படையின் விசேட படகு மூலம் நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் வருகை தந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டத்தை அமைச்சர் விதுர விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மேலும் சில நிகழ்வுகளில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கலந்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.