குவைத்தில் இலங்கையருக்கு மரணதண்டனை – ஜநா கண்டனம்
குவைத்தில் இலங்கையர் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் செய்ப் மகன்கோ, கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
குவைத் மற்றும் சிங்கப்பூரில், இந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளை, தமது அலுவலகம் கண்டிப்பதுடன், எல்லா சூழ்நிலைகளிலும் மரண தண்டனையை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குவைத்தில், இலங்கையைச் சேர்ந்த போதைபொருள் வர்த்தகர் ஒருவர் உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேநேரம், சிங்கப்பூரிலும் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை