தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் டக்ளஸ் சந்திப்பு!

யாழ்ப்பாணம்  வலி.வடக்கு, தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களை சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது,  திஸ்ஸ விகாரைக்கு விஜயத்தின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நடைமுறைச் சாத்தியமான வழிமுறை ஊடாக படிப்படியாக மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

அமைச்சரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள், தமது காணிகள் கிடைக்கும் என நம்பிக்கை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.