தையிட்டியில் மீண்டும் எதிர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த போராட்டம் இன்று (31) மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகி நாளை மாலை 4.00 மணிவரை இடம்பெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் மக்களை கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை