யாழில் உண்டியல் திருடன் கைது
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதுமலை அம்மன் மற்றும் வைரவர் பிள்ளையார் கோயில் போன்ற நான்கு இடங்களில் சில தினங்களுக்கு முன்னர் உண்டியல் திருட்டு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டனர்.
இந்நிலையில், சிசிடி கமரா உதவியுடன் நேற்று சந்தேக நபர் ஒருவர் வண்ணார் பண்னை சிவன் கோவிலடி முன்னால் உள்ள உணவகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரிடம் இருந்து ஒரு தொகை உண்டியல் பணங்களும் மீட்கப்பட்டன. கொழும்புத்துறை துண்டியை சேர்ந்த 35 வயதுடைய குறித்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை