நீச்சல் தடாகத்தில் இளைஞர் உயிரிழப்பு
ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லுனுகம, மண்டாவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். நேற்று சில நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
நீச்சல் தடாகத்தில் நீராடிய நிலையில், குறித்த இளைஞர் நீரில் மூழ்கியதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை