போதைக்கு அடிமையான இளைஞன் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில்
ஹெரோய்னை ஊசி மூலம் பயன்படுத்திய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நீதிமன்றப் பணிப்புக்கு அமைவாக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
போதைப்பாவனைக்கு இளைஞர் அடிமையானதையடுத்து வீட்டார் பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர்.
பொலிஸார் இளைஞனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது போதைப்பாவனைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் ஊடாக அவரைக் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பியுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை