கல்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஷாரப் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி கணக்காளர் கே.எம்
எஸ்.அமீர் அலி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ பாவா, திணைக்களங்களின் பிரதிநிதிகள்,முப்படைகளின் பிரதிநிதிகள் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் அஸ்வெசும தேசிய திட்டத்தில் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் தற்போதைய நிலை சம்பந்தமாக கலந்தாலோசித்து முடிவடுக்கப்பட்டது. அத்துடன் கல்முனை கடற்படையின் தளத்துக்கான மேலதிக காணி விடுவிப்பு செய்தல், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கோரிக்கைகள் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய குறைபாடுகள் போன்ற பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கருத்துக்களேதுமில்லை