மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையால், மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.சிவலிங்கத்தின் ஆலோசனையின் கீழ் மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா தலைமையில் இந்தச் சிரமதானப்  பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்கள் ஆலய சூழலை பேணும் வகையில் தமது கழிவுகளை அகற்றுமாறு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜாவால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.