நியூஸிலாந்து முன்னாள் பிரதமர்களை சந்தித்த பெண் எம்.பிக்கள் குழாம்!

நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அந்தநாட்டு முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் மற்றும் ஹெலன் கிளார்க் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில், அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் நியூஸிலாந்தின் முதலாவது பெண் பிரதமரான ஹெலன் கிளார்க் இலங்கை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களிடம் தமது அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.