2 ஆவது தென்னை முக்கோண வலயம் வடக்கில் ஆரம்பிக்கத் திட்டம் வகுப்பு! அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு
வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலையத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
செப்ரெம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலையத்தை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை