யாழ் வரணியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்!
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி, கறுக்காய் பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேககட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நடந்து சென்ற வயோதிபர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை