சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கல்! லயன்ஸ் பூமாதேவி – மகாதேவா ஞாபகார்த்தமாக
சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் புதிய நிர்வாக பதவியேற்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கழகத் தலைவர் லயன் க.டினேஷ் தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் புதிய தலைவராக வலி.வடக்கு பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் லயன் செ.விpஜயராஜ் பதவியேற்றார்.
நிகழ்வில் பிரதமவிருந்தினராக அனைத்து மாவட்ட லயன்ஸ் கழகங்களின் முன்னாள் தலைவரும் நீர்கொழும்பு கோல்டன் ஸ்ரார் பீச் ஹோட்டலின் நிர்வாக இயக்குநருமாகிய லயன் தேவா டி பீற்றர் – லயன் ஜசிந்தா பீற்றர் ஆகியோரும், சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கழக ஆளுநர் சபை ஆலோசகரும், கொமர்சல் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநருமாகிய லயன் சிவ.ரங்கநாதன் – லயன் கெலனி தம்பதிகளும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்துக்கு அளப்பெரும் சேவையாற்றி அமரத்துவமடைந்த லயன் மகாதேவா – லயன் பூமாதேவி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக அவர்களது மகன் லயன் ம.பிருதிவிராஜின் அனுசரணையில் 5 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை