யாழில் வீட்டில் வாளுடன் கைது செய்யப்பட்டவருக்கு பிணை
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வாள் ஒன்று நேற்று (05) மீட்கப்பட்டுள்ளது. அந்த வாளுடன் சந்தேகபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணைகளின்போது, சந்தேகபர் ஐயப்பன் சுவாமி விரதம் அனுஷ்டிப்பவர் என்றும், அந்த வாள் ஆலயத்தின் வாள் என்றும் தெரியவருகிறது.
இந்நிலையில் பொலிஸார், அவரை நேற்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை ஆள் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கருத்துக்களேதுமில்லை