அனலைதீவுக்கு கற்களுடன் சென்ற கப்பல் மூழ்கியது
ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் ஆலய துறைமுகத்தில் இருந்து அனலைதீவுக்கு கொங்கிரீட் கற்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று இன்றையதினம் கடலில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த சம்பவத்தின் போது கப்பலில் வேலை செய்யும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை