மாணவனை துஷ்பிரயோகப்படுத்திய ஆசிரியர் பொலிஸில் சரண்
பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்று மாலை தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரான ஆசிரியர் தலைமைறைவாகி இருந்தார்.
குறித்த சந்தேக நபரான ஆசிரியர் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக செயற்பட்டு வந்துள்ளதுடன், கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி விளையாட்டு அறையில் வைத்து பாலியல் ரீதியாக மாணவனை துஸ்பிரியோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது.
கருத்துக்களேதுமில்லை