மண்டபம் முகாமில் இருந்த இலங்கைப் பெண்ணைக் காணவில்லை
தமிழகம் – மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பெண் கடந்த ஜீலை மாதம் 27ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மண்டபம் பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கணவர் குறித்த முறைப்பாட்டைச் செய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை