மக்களுக்கு ராஜபக்ஷர்கள் மீது அதீத நம்பிக்கை உண்டு ஜனாதிபதி தேர்தலில் அரசியல் வரலாற்றில் மாற்றம் வரும்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் பொதுஜன பெரமுனவுக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை வெகுவிரைவில் அறிமுகப்படுத்துவோம். பொதுஜன பெரமுனவே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பேருவளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை புறக்கணித்து செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகின்றமை அடிப்படையற்றது. நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு காட்டு சட்டத்தை இல்லதொழித்தார். ஆகவே நன்றி மறக்கமாட்டோம்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் தீர்மானமிக்கதாக அமையும்.எம்முடன் இணைந்து ஜனாதிபதி செயற்பட்டால் ஒன்றிணைந்து செயற்படலாம். அரசியல் ரீதியில் அவர் தனித்து செயற்பட்டால் அதற்கு நாங்கள் முழுமையாக இடமளிப்போம்.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சி என்ற ரீதியில் இதுவரை எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. கட்சியை பலப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் தொகுதி அமைப்பாளர் கூட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியானதும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை விரைவாக களமிறக்குவோம். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

நாட்டு மக்கள் ராஜபக்ஷர்கள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேற்றமடைவோம். இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.