ராஜபக்ச தரப்பினர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் : சஜித் பிரேமதாஸ!
கொள்ளை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து ராஜபக்ச தரப்பினரை பாதுகாத்து வருகின்றமைக்காக ஜனாதிபதிக்கு அவர்களே நன்றி தெரிவிக்க வேண்டுமெனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
மஹரகமயில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் பூரண அணுசரனையுடன்தான் ராஜபக்ஷக்கள் இன்று வாழ்ந்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மிஹிந்தலைக்கு சென்று மின்சாரத்தை துண்டிக்க முடியுமாக இருந்தால், ஏன் மெதமுலனவுக்கு சென்று மின்சாரத்தை துண்டிக்க முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சியில்தான் ஊழல் மோசடிகள் அதிகளவில் நாட்டில் இடம்பெற்றுள்ளன.
தரமற்ற மருந்துகளால் எத்தனைப் பேர் உயிரிழந்தார்கள். இதுதான் இவர்களின் சுபீட்சமான நாடா?
இந்த நிலையில், திருமண வீட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் இருக்கும் நாமல் ராஜபக்ஷ, ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதாவது, தங்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண வேண்டும் என்று அரசியல் மேடையொன்றில் கூறியுள்ளார்.
தங்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி என்றால் நீங்கள் ஒலிவாங்கிக்கு முன்பாக அன்றி, ஜனாதிபதி செயலகத்திற்கு நேரடியாக சென்றே ஜனாதிபதியிடம் இதனைக் கூறுங்கள்.
கொள்ளை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து உங்கள் தரப்பினரை பாதுகாத்து வருகின்றமைக்காக ஜனாதிபதிக்கு நீங்கள் நன்றிகளையும் தெரிவியுங்கள்.
அத்தோடு, மிஹிந்தலை புன்னிய பூமியில், மின்சாரக் கட்டணம் நிலுவையில் இருந்த காரணத்தினால், அங்கு மின்துண்டிக்கப்பட்டது.
எனினும், தன்னை ஜனாதிபதியாக்கிய ராஜபக்ஷக்களின் மின்கட்டணம் தொடர்பாக ஜனாதிபதிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது.
விகாரைகளுக்கு சென்று மின்சாரத்தை துண்டிக்க முடியுமாக இருந்தால் ஏன், மெதமுலனவுக்கு சென்று மின்சாரத்தை துண்டிக்க முடியாது?
ஏனெனில், மெதமுலனவில் ராஜபக்ஷக்களுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு உள்ளது.
அரசாங்கத்தின் அணுசரணையுடன்தான் அவர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை