வயது கடந்த காதல் மோகம் – 19 வயது யுவதியை கூட்டிச்சென்ற 55 வயதானவர் – அடித்துக்கொன்ற உறவினர்கள்

சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 வயதுடைய வயதானவர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த கொலையுடன் தொடர்பட்ட 6 பேர் இதுவரை சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் குறித்த கொலையுடன் தொடர்பு பட்டவர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

55 வயது குடும்பஸ்தருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே வயதுகடந்த காதல் தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்கள் இருவரையும் ஊருக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இருவரும் (07) ஊருக்கு வந்தவேளை மக்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான குறித்தநபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சுன்னாகம் பொலிஸார் அனுப்பி வைத்த நிலையிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெகதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து துரித விசாரணைகளை மேற்க்கொண்ட சுன்னாகம் பொலிஸார் 6 பேரை இதுவரை கைது செய்துள்ளதுடன் மேலும் பலரை தேடி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.