கிழக்கு ஆளுநருடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் விசேட சந்திப்பு!
கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கும் இடையில் விசேடக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போதே கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் குறித்தும் எரிசக்தி செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை