வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடை 6 பேர் கைது

வவுனியாவில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய 6 பேரை நெளுக்குளம் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து கார் மற்றும் இரண்டு மோட்டர் சைக்கிள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வவுனியாவில் கடந்த 6 மாத காலமாக வழிப்பறிச் சம்பவம் அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும், குறிப்பாக வீதிகளில் செல்வோரிடம் இருந்து தங்கச் சங்கில் அறுக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் அதிகளவில் முறைப்பாடுகள் செய்யப்படுவதாகவும், வவுனியாவின் நெளுக்குளம், பம்பைமடு, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இத்திருட்டுச்சம்பவம் அதிகளில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இச்சம்பவங்களை ஒரு குழுவினரே திட்டமிட்டு மேற்கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அக்குழுவைச் சேர்ந்த 6 பேரையும் நேற்றைய தினம் பொலிஸார் கைதுசெய்துள்ளர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள்யாழ்ப்பாணம், தம்பனை ,பெரியதம்பனை ,குட்செட் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட காரில் வைத்தியசாலை சேவையில் பணியாற்றுவர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.