யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்களுக்கு உளவளப் பயிற்சி
யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்களுக்குரிய மனித உள வளம் சம்பந்தப்பட்ட பயிற்சி வழங்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிறுவர் அபிவிருத்தி எனும் போது பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி தேவை. நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உளவள பயிற்சி தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
மாகாணப் கல்விப் பணிப்பாளருடன் இது தொடர்பில் கதைத்திருந்தேன். தனியார் நிறுவனம் ஊடாக குறித்த பயிற்சியை வழங்குவதுடன் வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக வழங்குவதுடன் பின்னர் கட்டம் கட்டடமாக பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை