சம்பந்தனை சந்தித்தார் செந்தில் தொண்டமான்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமிர்த்தம் சந்தித்து, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை