உளவளப் பயிற்சிநெறிகள் ஆசிரியர்களுக்கு தேவை!

சிறுவர் அபிவிருத்தி எனும் போது பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி தேவையென யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆசிரியர்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உளவள பயிற்சி மற்றும் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

மாகாணக் கல்விப் பணிப்பாளருடன் இது தொடர்பில் கலந்துரையாடினேன். இதனையடுத்து தனியார் நிறுவனம் ஊடாக குறித்த பயிற்சியை வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

அந்தவகையில், வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் உள்ள  ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக பயற்சி வழங்கப்படவுள்ளதோடு பின்னர் கட்டம் கட்டடமாக ஏனைய பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும்  தீர்மானித்துள்ளோம்.

எனவே இதற்கு  வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள் ஒத்துழைக்க வேண்டும். – இவ்வாறு அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.