பொருளாதார நெருக்கடி மிக நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான ஊக்கியாக அமைந்துள்ளது – செகான்
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகநீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டபொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான ஊக்கியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான்சேமசிங்க இந்த சீர்திருத்தங்களை இலங்கையின் பொருளாதார பலவீனங்களுக்கு முடிவுகட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதலீடு தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது மிகநீண்டகாலமாக பயன்படுத்தப்படாமலிருந்த இலங்கையின் மிகப்பெரிய ஆற்றலை இறுதியாக நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது என நாங்கள் நம்புகின்றோம் என தெரிவித்துள்ள செஹான் இது முதலீட்டு கண்ணோட்டத்தில் இது பெரும் வாய்ப்பை வழங்குகின்றதுஎனவும் தெரிவித்துள்ளார்.
இலங்;கை துரித பொருளாதார மீட்சியை நோக்கி செல்வதற்கு தயாராகிவருவதால் இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் பயன்அடைவதற்கான சிறந்த தருணம் இது என குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர்
முதலீட்டு கண்ணோட்டத்தில் இலங்கை எவ்வளவு கவர்ச்சிகரமான நாடு என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை