பூப்பந்து சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை வீரர்கள் தேசிய மட்டத்துக்கு!
நூருல் ஹூதா உமர்
கடந்த 7, 8 ,9 ஆம் திகதிகளில் திருகோணமலை மெகெய்ஸர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பூப்பந்து சுற்றுப்போட்டி- 2023 இல் கல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை வீரர்கள் சிறப்பாக விளையாடி 18 வயதிற்குட்பட்ட வயதுப் பிரிவு சம்பியன் பட்டத்தை பெற்று கிழக்கு மாகாணத்தில் தனக்கான அடையாளத்தை மீண்டும் ஒரு தடவை நிருபித்து தேசிய மட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
போட்டியில் கலந்து கொண்டு சம்மியனாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும், அவர்களை பயிற்றுவித்து போட்டிக்காக அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்கள் அன்பு முகைதீன் அப்ராஜ் ரிலா மற்றும் எம்.எச்.எம். முஸ்தன்ஸிர் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை முதல்வர் எம்.ஐ.ஜாபீர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை