எரிபொருள் பௌசரும் – காரும் விபத்து : ஐவர் காயம்
எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கள் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் திம்புள்ள – பத்தனை சந்தியில் வைத்தே நேற்றிரவு10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் வேகமாக செலுத்தப்பட்டுள்ளது எனவும் அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஐவரும் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 20 -30 வயதுக்கிடைப்பட்டவர்கள் என விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை